< Back
கிரிக்கெட்
விராட் கோலியிடம் துடிப்புமிக்க அணுகுமுறை குறைய தொடங்கியுள்ளது - ஆஸி. முன்னாள் வீரர்

கோப்புப்படம்

கிரிக்கெட்

விராட் கோலியிடம் துடிப்புமிக்க அணுகுமுறை குறைய தொடங்கியுள்ளது - ஆஸி. முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
20 Nov 2024 9:12 AM IST

விராட் கோலியிடம் சமீப காலமாக அந்த துடிப்புமிக்க அணுகுமுறை குறைய தொடங்கியுள்ளது என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி ரன்கள் குவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலியிடம் சமீப காலமாக அந்த துடிப்புமிக்க அணுகுமுறை குறைய தொடங்கியுள்ளது எனவும், ஆஸ்திரேலிய அணியினர் அவரை சீண்டாமல் அவர் போக்கில் விட்டு விட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் ஷேன் வாட்சன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, இந்திய வீரர் விராட் கோலியிடம் சமீப காலமாக அந்த துடிப்புமிக்க அணுகுமுறை குறைய தொடங்கியுள்ளது. ஏனெனில் எல்லா நேரமும் ஒரே மாதிரியான தீவிரத்தன்மையுடன் விளையாடுவது கடினம். எனவே ஆஸ்திரேலிய அணியினர் அவரை சீண்டாமல் அவர் போக்கில் விட்டு விட வேண்டும். அவ்வாறு செய்தால் அவரிடம் இருந்து ஆக்ரோஷமான பேட்டிங் வெளிப்படாது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்