கிரிக்கெட்
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி...? - வெளியான தகவல்
கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் விராட் கோலி...? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
10 Jan 2025 10:01 AM IST

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதையடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தயாராகும் பொருட்டு விராட் கோலி அங்கு நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது அங்கு கவுண்டி போட்டிகள் நடைபெறுவதால் விராட் கோலி கவுண்டி கிரிகெட்டில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை பெங்களூரு அணி, ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட சுமார் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்