< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷாவுக்கு விராட் கோலி வாழ்த்து
கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷாவுக்கு விராட் கோலி வாழ்த்து

தினத்தந்தி
|
29 Aug 2024 7:42 AM IST

ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் உலகிலேயே இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராக அவர் சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், "வாழ்த்துக்கள் பல ஜெய் ஷா

ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு. நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்