< Back
கிரிக்கெட்
விராட் 3-4 வருடங்கள் விளையாடலாம்.. ஆனால் ரோகித்.. - ரவி சாஸ்திரி
கிரிக்கெட்

விராட் 3-4 வருடங்கள் விளையாடலாம்.. ஆனால் ரோகித்.. - ரவி சாஸ்திரி

தினத்தந்தி
|
31 Dec 2024 12:33 PM IST

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோகித் மற்றும் விராட் தடுமாறி வருகின்றனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது போட்டியிலிருந்து கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பி வருகிறார்.

மறுபுறம் மற்றொரு முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலியும் இந்த தொடரில் சொதப்பி இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். முதல் போட்டியில் சதம் அடித்திருந்தாலும் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆப் பந்துகளில் கேட்ச் ஆகி வருகிறார். இதன் காரணமாக இருவரும் ஓய்வு பெற வேண்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நல்ல பிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாட தகுதியுடையவர் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா பேட்டிங்கில் திணறுவதால் ஓய்வு பெறலாம் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி இன்னும் சில காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அவுட்டாகும் விதத்தை மறந்து விடுங்கள். அதையும் தாண்டி இன்னும் 3 - 4 வருடங்கள் விளையாட முடியும். ஆனால் ரோகித் சர்மா கவலைக்குரியவராக இருக்கிறார்.

எனவே ஓய்வு என்பது அவருடைய முடிவு. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடும் அவரின் புட் ஒர்க் முன்பு போல் இல்லை. அதனால் அவர் பந்தை மிகவும் தாமதமாக எதிர்கொள்கிறார். எனவே இந்தத் தொடரின் இறுதியில் ஓய்வை அறிவிப்பது அவருடைய முடிவு" என்று கூறினார்.

மேலும் செய்திகள்