வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா.. மற்ற வீரர்களுக்கு எவ்வளவு தொகை..?
|கொல்கத்தா அணி அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.
ஜெட்டா,
2025-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்னதாக ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஆந்த்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்திருந்தது.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஏலத்தொகை பின்வருமாறு:-
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
1. ரிங்கு சிங் - ரூ. 13 கோடி
2. வருண் சக்ரவர்த்தி - ரூ. 12 கோடி
3. சுனில் நரைன் - ரூ. 12 கோடி
4. ரசல் - ரூ. 12 கோடி
5. ஹர்ஷித் ராணா - ரூ. 4 கோடி
6. ரமந்தீப் சிங் - ரூ. 4 கோடி
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:-
1. வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி
2. ஆண்ரிஜ் நோர்ஜே (தென் ஆப்பிரிக்கா) - ரூ. 6. 50 கோடி
3. டி காக் ( தென் ஆப்பிரிக்கா) - ரூ. 3.60 கோடி
4. ரகுவன்ஷி - ரூ. 3 கோடி
5. ஸ்பென்சர் ஜான்சன் ( ஆஸ்திரேலியா) - ரூ. 2.80 கோடி
6. மொயீன் அலி (இங்கிலாந்து) - ரூ. 2 கோடி
7. ரஹ்மனுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - ரூ. 2 கோடி
8. வைபவ் ஆரோரா - ரூ. 1.80 கோடி
9. அஜங்யா ரகானே - ரூ. 1.50 கோடி
10. ரோவ்மன் பவல் ( வெஸ்ட் இண்டீஸ்) - ரூ. 1.50 கோடி
11. உம்ரான் மாலிக் - ரூ. 75 லட்சம்
12. மனீஷ் பாண்டே - ரூ. 75 லட்சம்
13. அனுகுல் ராய் - ரூ. 40 லட்சம்
14. சிசோடியா - ரூ. 30 லட்சம்
15. மயங்க் மார்கண்டே - ரூ. 30 லட்சம்