< Back
கிரிக்கெட்
பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம்: டிராவிஸ் ஹெட் உலக சாதனை
கிரிக்கெட்

பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம்: டிராவிஸ் ஹெட் உலக சாதனை

தினத்தந்தி
|
7 Dec 2024 1:42 PM IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் சதமடித்து அசத்தினார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அபாரமாக விளையாடி 111 பந்துகளில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் 121 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இதன் மூலம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களிலுமே டிராவிஸ் ஹெட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டியல்:-

1. டிராவிஸ் ஹெட் - 111 பந்துகள்

2. டிராவிஸ் ஹெட் - 112 பந்துகள்

3. டிராவிஸ் ஹெட் - 125 பந்துகள்

4. ஜோ ரூட் - 139 பந்துகள்

5. ஆசாத் ஷபீக் - 140 பந்துகள்


மேலும் செய்திகள்