< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: திருச்சி அபார பந்துவீச்சு... சேலத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

image courtesy: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: திருச்சி அபார பந்துவீச்சு... சேலத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

தினத்தந்தி
|
14 July 2024 6:39 PM IST

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி பெற்றது.

கோவை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 68 ரன்கள் குவித்தார். சேலம் தரப்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி திருச்சியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் 10 ரன்களும், கவின் 13 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய விவேக் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 33 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது அட்னன் கான் தவிர சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

18.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சேலம் 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அட்னன் கான் 40 ரன்கள் அடித்தார். திருச்சி தரப்பில் சரவணகுமார் 3 விக்கெட்டுகளும், ஆண்டனி தாஸ் மற்றும் ராஜ்குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

மேலும் செய்திகள்