< Back
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: சேலம் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பேட்டிங் தேர்வு

image courtesy: twitter/@TNPremierLeague

கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: சேலம் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
21 July 2024 7:03 PM IST

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

இதையடுத்து தொடரின் 3வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி சேலம் முதலில் பந்துவீச உள்ளது.

மேலும் செய்திகள்