டி.என்.பி.எல். : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு
|டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சேலம்,
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இதில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் (மாலை 3.15 மணி), கோவை கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்ய உள்ளது.