டி.என்.பி.எல்.: கோவை கிங்ஸ் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்த நெல்லை
|நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 47 ரன்கள் அடித்தார்.
கோவை,
தமிழ்நாடு பிரீமியர் லீக் ( டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லைகா கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அருண் கார்த்திக் 47 ரன்கள் குவித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஹரிஷ் மற்றும் சோனு யாதவ் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது. நெல்லை தரப்பில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 47 ரன்களும், சோனு யாதவ் 43 ரன்களும் குவித்தனர். கோவை தரப்பில் ஷாருக்கான் முகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கோவை பேட்டிங் செய்ய உள்ளது.