டி.என்.பி.எல்.: ஜெகதீசன், சந்தோஷ் அரைசதம்... திருச்சி அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சேப்பாக்
|சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக சந்தோஷ் குமார் 56 ரன்கள் அடித்தார்.
நெல்லை,
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் - ஜெகதீசன் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சந்தோஷ் குமார் 56 ரன்களிலும், ஜெகதீசன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் பெராரியோ (30 ரன்கள்), பிரதோஷ் ரஞ்சன் பால் (29 ரன்கள்) மற்றும் அபிஷேக் தன்வார் (26 ரன்கள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்துள்ளது. திருச்சி தரப்பில் அதிகபட்சமாக ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி பேட்டிங் செய்ய உள்ளது.