டி.என்.பி.எல்.: இந்திரஜித் அதிரடி... கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் வெற்றி
|திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 96 ரன்கள் குவித்தார்.
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ், ஷாருக்கானின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஷாருக்கான் 51 ரன்கள் அடிக்க, திண்டுக்கல் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு தொடக்க ஆட்டகாரர்கள் ஆன விமல் குமார் 13 ரன்களும், ஷிவம் சிங் 36 ரன்களும் அடித்து ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கோவை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்ட அவர் 96 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். 4 ரன்களில் சதத்தை தவறவிட்ட அவர் 96 ரன்கள் குவித்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்த திண்டுக்கல் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.