< Back
கிரிக்கெட்
டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று - டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு
கிரிக்கெட்

டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று - டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு

தினத்தந்தி
|
31 July 2024 7:33 PM IST

2-வது தகுதி சுற்று ஆட்டம் வருகிற 2-ந் தேதி சென்னையில் நடக்கிறது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும். ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

லீக் சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திருப்பூர் தமிழன்சுடன் வருகிற 2-ம் தேதி சென்னையில் மோதும். தோற்கும் அணி வெளியேறும்.

மேலும் செய்திகள்