< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
|2 Aug 2024 6:55 PM IST
2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் முன்னேறியுள்ளது. இந்த தொடரின் 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி திருப்பூர் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.