சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் டிம் சவுதி
|நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஹாமில்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டிம் சவுதி ஓய்வு பெற்றார். இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், இவர் 54 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
முன்னணி வீரரான டிம் சவுதியை நியூசிலாந்து அணியினர் வெற்றியுடன் வழி அனுப்பி வைத்தனர். டிம் சவுதி ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.