< Back
கிரிக்கெட்
டிம் டேவிட் அரைசதம்.. சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

image courtesy: twitter/@HurricanesBBL

கிரிக்கெட்

டிம் டேவிட் அரைசதம்.. சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

தினத்தந்தி
|
10 Jan 2025 5:42 PM IST

சிட்னி தண்டர் தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 88 ரன்கள் அடித்தார்.

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர் அணி, நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்சை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற நாதன் எல்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி அணிக்கு கேப்டன் வார்னர் மட்டும் தனி ஆளாக மறுமுனையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வார்னர் 88 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். ஹரிகேன்ஸ் தரப்பில் ரீலே மெரிடித் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன மேத்யூ வேட் (5 பந்துகள்) மற்றும் மிட்செல் ஓவன் (6 பந்துகள்) தலா 13 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியை எளிதில் வெற்றி பெற வைத்தார். வெறும் 16.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 165 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிட்னி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய டிம் டேவிட் 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்