< Back
கிரிக்கெட்
விராட் கோலியுடன் எனக்கு மறக்க முடியாத நிகழ்வு இதுதான் - நினைவுகளை பகிர்ந்த ரகானே

image courtesy: AFP

கிரிக்கெட்

விராட் கோலியுடன் எனக்கு மறக்க முடியாத நிகழ்வு இதுதான் - நினைவுகளை பகிர்ந்த ரகானே

தினத்தந்தி
|
31 Oct 2024 10:24 AM IST

விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடிய தருணங்களை ரகானே பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 16 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். அத்துடன் பிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலியுடன் சேர்ந்து இந்திய அணிக்காக விளையாடிய தருணங்களை ரகானே பகிர்ந்துள்ளார். குறிப்பாக 2014 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மறக்க முடியாதது என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் எப்படி பிட்டாக இருக்க வேண்டும் என்பதை விராட் கோலியிடம் கற்றுக் கொண்டதாகவும் ரகானே தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலியிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். அவர் தன்னுடைய விளையாட்டுக்கு செல்லும் விதம், பயிற்சி எடுக்கும் விதம், பிட்னஸ், உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டேன். அவருடன் இணைந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன். நாங்கள் சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம்.

நாங்கள் இந்தியாவுக்காக சேர்ந்து சில மகத்தான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2014 தொடரில் அவருடன் சேர்ந்து சுமார் 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது எனக்கு மிகவும் பிடித்தது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்