< Back
கிரிக்கெட்
இந்திய அணியை  இப்படித்தான் வீழ்த்தினோம் - நியூசிலாந்து கேப்டன் பேட்டி
கிரிக்கெட்

இந்திய அணியை இப்படித்தான் வீழ்த்தினோம் - நியூசிலாந்து கேப்டன் பேட்டி

தினத்தந்தி
|
4 Nov 2024 9:53 AM IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றியது.

மும்பை,

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் நியூசிலாந்து பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 147 ரன் இலக்கை கூட விரட்டி பிடிக்க முடியாமல் இந்திய அணி தோல்வி கண்டது. இதனால் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், "நாங்கள் இந்த தொடர் ஆரம்பிக்கும்போது இந்த நிலைக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. உண்மையாகவே மூன்று போட்டியிலும் எங்களது அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர். ஒவ்வொரு போட்டியின் போதும் நாங்கள் நினைத்ததை எங்களால் செய்ய முடிந்தது.

முதல் இரண்டு போட்டிகளை விட மும்பை மைதானம் இன்னும் வித்தியாசமாக இருந்தது. எங்களுக்கு இந்த மைதானத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இருந்த சவால்களை கடந்து மிகச்சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. இந்தத் தொடர் முழுவதுமே எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசி அசத்தியுள்ளனர். மேலும் பேட்டிங்கிலும் எங்களால் பங்களிக்க முடிந்தது. இந்த வெற்றி எங்களுக்கு ஒரு அணியாக மிகச்சிறப்பான உணர்வைத் தந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்