< Back
கிரிக்கெட்
இந்தியாவை அவர்கள் முன்னிலையில் வீழ்த்தியதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது - ஆடம் ஜம்பா

image courtesy: PTI

கிரிக்கெட்

இந்தியாவை அவர்கள் முன்னிலையில் வீழ்த்தியதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது - ஆடம் ஜம்பா

தினத்தந்தி
|
10 Aug 2024 7:54 AM IST

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

சிட்னி,

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் தோல்வியே சந்திக்காத ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

அப்போட்டிக்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு லட்சம் இந்தியர்களை அமைதியாக்கி கோப்பையை வெல்வோம் என்று சொன்னதை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கம்மின்ஸ் செய்து காண்பித்தார்.

இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்றதால் உலகக்கோப்பை நமக்குத் தான் என்று இந்திய ரசிகர்கள் நினைத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார். ஆனால் கடைசியில் இந்திய ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்றதை விட தமது கெரியரில் ஒரு சுகமான உணர்வு இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவிற்கு உலகக்கோப்பை கொடுக்கப்பட்டதுபோல அவர்களின் ரசிகர்கள் நினைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை வீழ்த்துவதற்கு ஏதோ ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என்பது போல் அன்றைய சூழ்நிலை இருந்தது. அங்கே 1,20,000 இந்தியர்கள் காத்திருந்தனர். ஏற்கனவே நான் சொன்னது போல் அது இந்தியா வெல்வதற்கான கோப்பை என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் கடைசியில் வெறும் 240 ரன்களை மட்டுமே அடிப்பதற்காக மைதானத்திற்கு சென்றபோது எங்களுக்கு ஒரு திருப்தி இருந்தது.

அங்கேயும் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்தபோது அங்கும் இங்கும் ஸ்விங் பந்துகள் பறந்த சூழ்நிலையை உணர்ச்சியுடன் பார்த்தது கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுசாக்னே இணை அனைத்தையும் கட்டுப்படுத்தி விளையாடியது திருப்தியை கொடுத்தது. இறுதியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அவர்களின் ரசிகர்களுக்கு முன்னிலையில் வீழ்த்தியதை விட வேறு சிறந்த உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்