< Back
கிரிக்கெட்
இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

தினத்தந்தி
|
4 Nov 2024 10:44 AM IST

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் என்று இந்திய வீரர் முன்னாள் இர்பான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவிட்டுள்ளது பின்வருமாறு: "யூசுப் தான் பாயுடன் நேற்று இது பற்றி திடமான பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் இந்தியாவின் உள்ளூர் போட்டிகள் பற்றி நியாயமான கருத்தைத் தெரிவித்தார். அதாவது இப்போதெல்லாம் நாம் உள்ளூரில் ஒன்று பிளாட்டான பிட்ச்சில் விளையாடுகிறோம் அல்லது பச்சை புற்கள் கூடிய பிட்ச்சில் விளையாடுகிறோம். அரிதாக மட்டுமே இது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுகிறோம். மேலும் நம்முடைய முன்னணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்