
Image Courtesy: IPL
லக்னோ அணியுடனான பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய அனைவருக்கும் நன்றி - கே.எல்.ராகுல்

நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் கே.எல்.ராகுலை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் ஆகியவை சமீபத்தில் நடந்தது. இந்த ஏலத்தில் கே.எல்.ராகுல் இடம் பெற்றிருந்தார். அவரை டெல்லி அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக கடந்த ஐ.பி.எல். தொடரின்போது லக்னோ அணியின் கேப்டனான லோகேஷ் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று கருத்துகள் நிலவின.
இந்நிலையில், லக்னோ அணியுடனான பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது,
லக்னோ அணியுடனான பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கை, கொடுத்த நினைவுகள், ஆதரவு ஆகியவற்றிற்கும் நன்றி. இதோ ஒரு புதிய தொடக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.