< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய ஷபாலி வர்மா

Image Courtesy: @BCCIWomen

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய ஷபாலி வர்மா

தினத்தந்தி
|
28 Jun 2024 3:40 PM IST

ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

சென்னை,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. இருவரும் சதம் அடித்து அசத்தினர். அணியின் ஸ்கோர் 292 ரன்களை எட்டிய போது மந்தனா 149 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய சுபா சதீஷ் 15 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடியது. ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷபாலி வர்மா 194 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

அவர் இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இந்திய அணி இதுவரை 75 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்