வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை
|வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
டாக்கா,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி, தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவர்களில் 106 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, வியான் முல்டர், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தை விட 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கைல் வெர்ரியன்னே 18 ரன்களுடனும், வியான் முல்டர் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.