< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Nov 2024 12:28 AM IST

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:- நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், மஹிதுல் இஸ்லாம் அன்கான், லிட்டன் தாஸ், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது , ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, ஹசன் முராத்

மேலும் செய்திகள்