< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்; வங்காளதேச முன்னணி வீரர் விலகல்

கோப்புப்படம்

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர்; வங்காளதேச முன்னணி வீரர் விலகல்

தினத்தந்தி
|
8 Nov 2024 4:46 PM IST

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான வங்காளதேச அணிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியின் போது முஷ்பிகுர் ரஹீமுக்கு இடது கை ஆள்காட்டி விரலின் நுனியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அது குணமாக 4 முதல் 6 வாரங்கள் ஆகும் எனவும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்