கிரிக்கெட்
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
|9 Jan 2025 2:36 PM IST
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 29-ம் தேதியும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 6-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான கேப்டன் கம்மின்சுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டீவ் சுமித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:-
ஸ்டீவ் சுமித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், நாதன் மெக்ஸ்வீனி, பியூ வெப்ஸ்டர், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், கூப்பர் கனோலி, டாட் மர்பி, மாட் குஹ்னேமன், சீன் அபோட், ஸ்காட் போலன்ட்.