இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்
|இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
கேப்டவுன்,
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும், இதில் கடந்த 27ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்டு கோட்ஸி விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியின் போது அவர் காயமடைந்ததாகவும், அந்த காயம் குணமடைய 4 முதல் 6 வாரங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான எஞ்சிய தொடரில் இருந்தும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.