< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
4 Aug 2024 9:25 PM IST

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் இரு அணிகளுக்கும் நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேற உதவும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

மேலும் செய்திகள்