< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

கோப்புப்படம்

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 1:44 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு தன்ஞ்செயா டி சில்வா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், கசுன் ரஜிதா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம்; தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமல், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், காமிந்து மெண்டிஸ், ஒஷாடா பெர்ணாண்டோ, சதீரா சமரவிக்ரமா, பிரபாத் ஜெயசூர்யா, நிஷார் பெய்ரிஸ், லசித் எம்புல்டேனியா, மிலான் ரத்னநாயகே, அசிதா பெர்ணாண்டோ, விஷ்வா பெர்ணாண்டோ, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

மேலும் செய்திகள்