< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2024 7:31 AM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் கராச்சி மற்றும் முல்தானில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரேக் பிராத்வெய்ட் கேப்டனாகவும், ஜோசுவா டி சில்வா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக வீரராக அமீர் ஜாங்கோ இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: கிரேக் பிராத்வெய்ட் (கேப்டன்), ஜோசுவா டி சில்வா (துணை கேப்டன்), அலிக் அத்தானஸ், கீசி கார்டி, ஜஸ்டின் க்ரேவஸ், கெவம் ஹோட்ஜ், டெவின் இம்லாக், அமீர் ஜாங்கா, மைக்கேல் லூயிஸ், குடகேஷ் மோடி, ஆண்டர்சென் பிலிப், கெமர் ரோச், கெவின் சின்க்லெய்ர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன்.

மேலும் செய்திகள்