கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன்..? - பயிற்சியாளர் விளக்கம்

Image Courtesy: @BCCIdomestic

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன்..? - பயிற்சியாளர் விளக்கம்

தினத்தந்தி
|
22 Oct 2024 8:13 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும் போது சுந்தர் சேர்க்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சவாலை கொடுப்பதற்காக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

வலுக்கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை கொண்டு வரவில்லை. ஏனெனில் எங்களுடைய அணியில் ஏற்கனவே அக்சர் பட்டேல் இருக்கிறார். இருப்பினும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை வெளியே எடுக்கக்கூடிய ஒருவர் அணியில் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.

அந்த ஆப்ஷன் இருப்பதை விரும்புகிறோம். ரஞ்சிக் கோப்பையில் அசத்திய வீரர்களுக்கு பரிசாக இந்த வாய்ப்பு கிடைப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. எங்கள் ஸ்பின்னர்கள் மீது நாங்கள் நிறைய நம்பிக்கையை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்