< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து விக்கெட் கீப்பர் விலகல்

image courtesy: ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து விக்கெட் கீப்பர் விலகல்

தினத்தந்தி
|
24 Nov 2024 6:13 PM IST

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகா கருதப்படுகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோர்டன் காக்ஸ் விலகியுள்ளார்.

மேலும் செய்திகள்