< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் விலகல்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் விலகல்

தினத்தந்தி
|
9 Sept 2024 7:48 AM IST

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.

காபூல்,

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிதான் அணியில் முன்னணி பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரான் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இடது கனுக்காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இப்ராகிம் ஜட்ரான் விலகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்