இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
|நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
பெங்களூரு,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பென் சியர்ஸ் முழங்கால் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஜேக்கப் டக்ப்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.