< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Nov 2024 10:53 AM IST

அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்த உள்ளார். மேலும் இரண்டு புதுமுக வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விபரம்:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசேன், நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

மேலும் செய்திகள்