டெஸ்ட் தரவரிசை: ஜெய்ஸ்வால் சரிவு.. பந்துவீச்சாளர்களில் பும்ரா தொடர்ந்து முதலிடம்
|டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
துபாய்,
இங்கிலாந்து - நியூசிலாந்து மற்றும் இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதமடித்து அசத்திய ஹாரி புரூக் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 2-வது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 2 இடங்கள் சரிந்து 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வில்லியம்சன் 3-வது இடத்தில் தொடருகிறார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். அஸ்வின் 4-வது இடத்திலும், ஜடேஜா (ஒரு இடம் உயர்வு) 6-வது இடத்திலும் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 19 இடங்கள் முன்னேறி 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா மாற்றமின்றி முதலிடத்தில் உள்ளார். ஆனால் 2-வது இடத்தில் இருந்த அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஏனெனில் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் 10 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.