< Back
கிரிக்கெட்
டெஸ்ட் தரவரிசை; பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பும்ரா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசை; பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த பும்ரா

தினத்தந்தி
|
27 Nov 2024 3:11 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

துபாய்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பும்ரா (883) பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அஸ்வின் (807 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4வது இடத்திற்கு வந்துள்ளார்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (903 புள்ளி) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஜெய்ஸ்வால் (825 புள்ளி) 2 இடம் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப்பட்டியலில் ரிஷப் பண்ட் (736 புள்ளி) 6வது இடத்தில் தொடர்கிறார். மேலும், விராட் கோலி (689 புள்ளி) 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்திற்கு வந்துள்ளார்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (423 புள்ளி) முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (290 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.


மேலும் செய்திகள்