< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின் டாம் லாதம் கூறியது என்ன..?
|2 Dec 2024 4:00 AM IST
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது
கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் இன்னிங்சில் நாங்கள் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஆனால் நிறைய கேட்ச் வாய்ப்புகளை (8 கேட்ச் தவற விட்டனர்) விட்டு விட்டோம்.
அதை சரியாக செய்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் சில நேரம் இது மாதிரி நடப்பது சகஜம். அடுத்த டெஸ்டில் பீல்டிங்கில் இதை விட நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.