< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் இதுவரை எந்த அணியும் படைத்திராத சாதனையை படைத்த நியூசிலாந்து
|3 Nov 2024 2:38 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளிலேயே நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
3-வது நாளுக்குள்ளேயே முடிவடைந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதன் மூலம் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற பிரம்மாண்ட சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.