< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

தினத்தந்தி
|
26 Oct 2024 8:24 PM IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் இந்திய மண்ணில் 69 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் நியூசிலாந்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

மேலும் செய்திகள்