சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க முஷ்பிகுர் ரஹீமுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
|இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
மும்பை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்த தொடரில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார். வங்காளதேசத்திற்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 820 ரன்களை 136.66 என்ற அற்புதமான சராசரியில் குவித்துள்ளார்.
இவருக்கு பின் முஷ்பிகுர் ரஹீம் இந்தியாவுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடி 604 ரன்கள் குவித்துள்ளார்.
எதிர் வரும் தொடரில் ரஹீம் 217 ரன்கள் அடித்தால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைப்பார்.