< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த நியூசிலாந்து

Image : @BLACKCAPS

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த நியூசிலாந்து

தினத்தந்தி
|
27 Nov 2024 4:07 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன், ஹாமில்டன் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி நாளை தொடங்க உள்ளதை அடுத்து இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வில் யங் இந்த லெவனில் இடம் பெறவில்லை.

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் அறிமுக வீரராக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் விக்கெட் கீப்பராக டாம் பிளண்டெல் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி விவரம்; டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், டிம் சவுதி, மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க்.


மேலும் செய்திகள்