< Back
கிரிக்கெட்
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவி: பரிசீலனையில் உள்ள முன்னாள் வீரர்கள்

கோப்புப்படம்

கிரிக்கெட்

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவி: பரிசீலனையில் உள்ள முன்னாள் வீரர்கள்

தினத்தந்தி
|
11 July 2024 10:34 AM IST

இந்திய அணிக்கு புதிய பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்தது. அதன்பின் அவர் பணியில் தொடர அவர் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அந்த பதவியில் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த சூழ்நிலையில் ராகுல் டிராவிட்டுடன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்றனர். எனவே அவர்களுக்கு பதில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

அதில் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர்கான், தமிழகத்தின் எல்.பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கவுதம் கம்பீர் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு வினய்குமாரை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்