இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
|இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் தலைமையிலான அந்த அணியில் கோட்சே, மார்கோ ஜான்சன் ஆகியோர் நீண்ட நாள் கழித்து இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-
மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்சே, டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், அண்டில் சிமெலேன், லூத்தோ சிபம்லா (3வது மற்றும் 4வது டி20), மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.