வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
|வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டி20 போட்டி வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ்.