தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
|தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கயானா,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அங்கு முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டி20 போட்டி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-
ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானாஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ போர்டே, ஷிம்ரோன் ஹெட்மயர், பேபியன் ஆலன், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், ஓபேட் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட்.