< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை வெற்றி: குழந்தை மற்றும் மனைவியுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த விராட் கோலி
|30 Jun 2024 9:12 AM GMT
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பார்படாஸ்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆட்ட நாயகன் விருது வாங்கும் நிகழ்வில் இதனை அறிவித்தார்.
ஓய்வை அறிவித்ததும் உடனடியாக தனது மனைவிக்கு வீடியோகால் செய்த விராட் கோலி உணர்ச்சிவசமாக பேசினார். பின்னர் தனது குழந்தையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.