டி20 உலகக்கோப்பை: முதல் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் - ரோகித்..அணி விவரம்
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோதுகிறது.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து பேட்டிங் செய்ய உள்ளது.
இதில் இந்திய அணியின் பிளேயிங் 11-ஐ கேப்டன் ரோகித் அறிவித்தபோது அதில் ஜெய்ஸ்வால் பெயர் இடம்பெறவில்லை. இதன்மூலம் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்பது உறுதியாக உள்ளது.
முன்னதாக பல இந்திய முன்னாள் வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் விராட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்று கருத்துகள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிளேயிங் 11 பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்.