< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு  தேர்வு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
6 Jun 2024 8:35 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறுகின்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறுகின்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடுகின்றது.

டல்லாஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், உஸ்மான் கான், பகார் ஜமான், அசாம் கான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஹாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், ஹரிஸ் ரவூப்.

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரீஸ் கவுஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.

மேலும் செய்திகள்