டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு
|டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
துபாய்,
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.
இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் (டிரினிடாட்) போட்டிக்கான நடுவர்கள் விவரம்:
நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)
டிவி நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து)
நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா (பாகிஸ்தான்)
இந்தியா - இங்கிலாந்து (கயானா) போட்டிக்கான நடுவர்கள் விவரம்:
நடுவர்: ஜெப்ரி குரோவ் (நியூசிலாந்து)
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து) மற்றும் ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா)
டிவி நடுவர்: ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
நான்காவது நடுவர்: பால் ரீபெல் (ஆஸ்திரேலியா)